×

மகிந்திரா எக்ஸ்யுவி 300 டர்போ ஸ்போர்ட்

மகிந்திரா நிறுவனம், எக்ஸ்யுவி 300 டர்போ ஸ்போர்ட் என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்பை விட கூடுதலாக 20 பிஎச்பி பவரையும், 30 எனம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய தோற்றத்தில் முன்புற கிரில், லோகோ இடம் பெற்றுள்ளன. டூயல் டோனுடன் 4 புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. எலக்ட்ரிக் சன் ரூப், புரோஜக்டர் ஹெட்லாம்ப், இரட்டை மண்டல கிளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப் மற்றும் வைப்பர்கள், 6 ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 3 வேரியண்ட்கள் உள்ளன. டபிள்யூ6 டிஜிடிஐ மோனோடோன் ஷோரூம் விலை சுமார் ரூ.10.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டபிள்யூ 8 டிஜிடிஐ மோனோ டோன் ரூ.11.65 லட்சம், டூயல் டோன் ரூ.11.80 லட்ம் எனவும், டாப் வேரியண்டான டபிள்யூ8 (ஓ)டிஜிடிஐயில் மோனோ டோன் ரூ.12.75 லட்சம் எனவும், டூயல் டோன் ரூ.12.90 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. …

The post மகிந்திரா எக்ஸ்யுவி 300 டர்போ ஸ்போர்ட் appeared first on Dinakaran.

Tags : Mahindra ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்