×

நீலகிரியில் நியூசிலாந்து சுற்றுலா பயணிகள்: தோடர் கலாச்சாரங்களை பார்த்து மகிழ்ச்சி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்று கலாச்சாரங்களை கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக ஊட்டி வர கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. தற்போது, தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்கள் வெளிநாட்டினர் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுவினர் நேற்று ஊட்டியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்டீபன் தேவாலயத்தை பார்வையிட்டு அங்குள்ள முன்னோர்களின் கல்லறைகளையும் பார்த்தனர்.தொடர்ந்து, முத்தோரை பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து தமிழகம் மந்து பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அவர்களின் பாரம்பரிய குடியிருப்புகளை பார்த்தும், கலாச்சாரங்களை கேட்டறிந்தனர். பின்னர், தோடர் பழங்குடியின மக்களின் தோடர் எம்ராய்டரி வேலைபாடுகளை பார்த்து அவற்றை வாங்கி சென்றனர்….

The post நீலகிரியில் நியூசிலாந்து சுற்றுலா பயணிகள்: தோடர் கலாச்சாரங்களை பார்த்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Nilgiri ,Thodar ,Zealand ,Dodar ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...