×

மல்லுவுட் செல்கிறார் அனிருத்

சென்னை: முதல் முறையாக மலையாள படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். தமிழில் 3, வேலையில்லா பட்டதாரி, விக்ரம், மாஸ்டர், கத்தி, பேட்ட, தானா சேர்ந்த கூட்டம், டாக்டர், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். இப்போது ஜெயிலர், இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹனீஃப் அடேனி இயக்க உள்ளார். இதில் இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் இதில் பணியாற்ற சம்மதிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கிலும் சில படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்போது பாலிவுட், மல்லுவுட் படங்களுக்கும் இசையமைப்பதால் அனிருத்துக்கான டிமாண்ட் சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது….

The post மல்லுவுட் செல்கிறார் அனிருத் appeared first on Dinakaran.

Tags : Anirudh ,Mallwood ,Chennai ,Petta ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar