தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி; அஜீத் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது

இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் ஏற்று நடித்த வேடத்தில் அஜீத்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழில் இப்படத்துக்கு நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டிருக்கிறது. விஸ்வாசம் படம் முடிந்து திரைக்கு வந்த கையோடு நேர்கொண்ட பார்வை படம் தொடங்கப்பட்டது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தியில் வெளியான பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட் டுள்ளது என்று படத்தில் டாப்சி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்காக படப்பிடிப்பு எதுவும் தடைபடவில்லை. இயக்குனர் எச்.வினோத் துரிதகதியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இப்படத்தை அஜீத் பிறந்த நாளான மே 1 ம்தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே அஜீத் நடித்து திரைக்கு வந்த விஸ்வாசம் படம் இன்னமும் வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் வருவதால் அதை பாதிக்காத வகையிலும் மேலும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாலும் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறதாம். மே 1ம் தேதிக்கு பதில் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

Tags : Echo ,election date announcement ,Ajith ,
× RELATED சிஏஏவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி 2...