பிரியா வாரியர் மீது இயக்குனர் புகார்

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் காதல் காட்சியில் கண்டித்து நடித்தது பிரபலமானதை யடுத்து பிரியா வாரியருக்கு மவுசு கூடியது. ஆனால் இப்படத்தில் முதலில் நூரின் ஷெரீப்தான்  ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதையடுத்து நூரினை துணை பாத்திரமாக்கி பிரியாவை ஹீரோயினாக்கினார்களாம்.

ஆனால் அவரோ பட புரமோஷனுக்கு ஒத்துழைக்கவில்லை என்று இயக்குனர் ஒமர் லுலு சரமாரியாக புகார் கூறி உள்ளார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது,’இப்படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியா வாரியர் ஹீரோயின் கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதையடுத்து தயாரிப்பாளர் என்னிடம் அணுகி பிரியா வாரியரை ஹீரோயினாக வைத்து ஸ்கிரிப்ட்டை மாற்றி எழுதும்படி கூறினார்.

முன்னதாக நடிகை நூரின் ெஷரிப் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத் திரம் துணை பாத்திரமாக்கப்பட்டது. பிரியாவாரியர் பட புரமோஷன்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. பட ரிலீஸுக்கு பிறகு நடந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது’ என்றார்.

Tags : Priya Warrior ,
× RELATED பிரியா வாரியர் கேரக்டர் - ரகுல் பிரீத் கண்டிஷன்