×

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

மதுரை : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்கள் விரைவு ரயில்களை தனியாருக்கு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து திருச்சியிலும் எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். திருச்சி பொன்மலை ரயில்வே பனிமனை முன்பு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டங்களில் 1000-த்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2004-ம் ஆண்டிற்கு முன்பு இருந்த பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.        …

The post ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : SRMU ,Union Government ,Madurai ,Trade Unions ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...