×

துபாயில் 5 நாள் நடைபெறும் ஐடி கண்காட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

சென்னை: அமைச்சர் மனோ தங்கராஜ் துபாயில் 5 நாள் நடைபெறும் வளைகுடா தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள GITEX கண்காட்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். “வளைகுடா தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி”, ஆண்டுதோறும்  உலகளவில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாகும். சுமார் 170 நாடுகளில் இருந்து அரசு சார்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், தனியார் துறைச் சார்பாளர், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முன்னோடிகள் போன்ற பலர் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சி, துபாய் உலக வர்த்தக மையத்தில் 10ம் தேதி(நேற்று) முதல் வருகிற 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கடைக் கோடியில் இருக்கும் மக்களுக்கும் சென்றடைய, அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மேற்கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற பெரும் சவால்களைத் தொழில்நுட்பம் மூலம் குறைப்பது குறித்து விவாதிக்க, இந்தக் கண்காட்சியும், மாநாடும் உதவும்.  உயர் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, இதுபோன்ற சவால்களுக்குத்  தீர்வுகள் வழங்கும். இது போன்ற பெரும் இடர்பாடுகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்கள் இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் இடம்பெறும்….

The post துபாயில் 5 நாள் நடைபெறும் ஐடி கண்காட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ID Exhibition ,Dubai ,Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Thangaraj ,Gulf Information Technology Exhibition ,Tamil Nadu ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...