×

13 வருடத்துக்கு பிறகு தனுஷுடன் இணையும் சினேகா

செல்வராகவன்  இயக்கிய  படம் ‘புதுப்பேட்டை’. கடந்த 2006ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் தனுஷ், சினேகா ஜோடியாக நடித்திருந்தனர். 13 வருடங்கள் கழித்து இந்த ஜோடி புதிய படத்தில் இணைய உள்ளது. துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் தனுஷ், சினேகா இணைய உள்ளனர். இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார். தந்தை தனுஷுக்கு ஜோடியாகத்தான் சினேகா நடிப்பதாக தெரிகிறது. மகன் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கிய ‘கொடி’ படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடத்தில் நடித்திருந்த தனுஷுக்கு திரிஷா, அனுபமா ஜோடியாக நடித்திருந்தனர். புதிதாக உருவாகவுள்ள ‘கொடி ‘ படத்தின் 2ம் பாகமா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. இதற்கிடையில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sneha ,Dhanush ,
× RELATED தாய்மாமன் தனுஷ்