அஜித்தின் நேர்கொண்ட பார்வை

அஜித் நடிக்கும் 59-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் ஹிந்தியில் மிகப்பெரும் ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமாக தமிழ் திரைப்படங்களின் பாணியில் இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 'தல'59-ன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடபட்டுள்ளது. படத்திற்கு நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags : Ajith ,
× RELATED அஜித்தையே உருகவைத்த மானு!