ஹிரித்திக்குடன் முத்தக்காட்சி; தமன்னா விருப்பம்

சமீபத்தில் மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில் ஹிரித்திக் ரோஷனை சந்தித்தார் தமன்னா. ஹிரித்திக்கின் தீவிர ரசிகையான அவர், அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டு பூரிப்படைந்துள்ளார். இது பற்றி தமன்னா கூறும்போது, ‘ஹிரித்திக்கை பல விழாக்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரிடம் பேசும் வாய்ப்பு அமையவில்லை.

இந்த முறை அவரை பார்த்து பேசினேன். எனது அடுத்த படங்களை பற்றி கேட்டறிந்தார். ஹிரித்திக்குடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. வழக்கமாக நான் லிப் டு லிப் முத்தக்காட்சிக்கு சம்மதிப்பதில்லை. ஆனால் ஹிரித்திக் ஹீரோ என்றால் முத்தக்காட்சிக்கும் நான் ரெடி’ என்றார்.

Tags : hrithik ,Tamanna ,
× RELATED நினைத்ததை நிறைவேற்றும் அன்னை...