×

லாரியில் இருந்து சிதறும் கரும்புகளை சுவைக்க திரண்ட 10 யானைக்கூட்டம்-காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் : ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரியில் இருந்து சிதறும் கரும்புகளை சுவைக்க காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன. இந்த நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் வழியாக வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள உயரத்தடுப்புக்கம்பி வழியாக லாரி நுழையும் போது கரும்புகள் அதிகளவில் சிதறி சாலையில் விழுகின்றன. இந்த கரும்புத் துண்டுகளை சாலையோர வனப் பகுதியில் லாரி டிரைவர்கள் வீசிச் செல்கின்றனர்.இதனால், பகல் நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக  இந்த பகுதியில் முகாமிட்டு கரும்பு துண்டுகளை திண்பதில் ஆர்வம் காட்டுகின்றன. நேற்று காலை அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு கரும்பு துண்டுகளை ருசித்தன. இதனால், சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்….

The post லாரியில் இருந்து சிதறும் கரும்புகளை சுவைக்க திரண்ட 10 யானைக்கூட்டம்-காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,National Highway Oram ,Karnataka ,Tamil Nadu ,Asanur ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு