குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க செய்யும் முருகன் வழிபாடு..!!

உடனடியாக கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத தோஷத்தை நிவர்த்தி செய்ய ஆன்மீக ரீதியாக என்ன வழிபாடு உள்ளது. முருகப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியில் இருந்து 4.30 வரை இருக்கக்கூடிய ராகு கால நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது முருகன் கோவில் இருந்தாலோ அல்லது முருகன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்வது மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும்.

ஒருவேளை உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவில் ராகு கால நேரத்தில் திறந்து இருக்காது எனும் பட்சத்தில், உங்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய முருகப் பெருமானின் திரு உருவ படத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். கொஞ்சமாக பால் பாயாசத்தை நிவேதனமாக வைத்து முருகப்பெருமானுக்கு தீப தூப ஆரத்தி காண்பித்து அந்த முருகப்பெருமானின் முன்பு அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களை சொல்லுங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

வீட்டில் திருமணம் ஆகாத குழந்தைகளுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும். குழந்தை பேறு தள்ளிப் போக கூடியவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிட்டும். எப்போது பார்த்தாலும் கணவன்-மனைவிக்குள் சண்டை என்றால் அவர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த செவ்வாய்க்கிழமை ராகுகால முருகன் வழிபாடு உடனடியாக கை கொடுக்கும்.

எந்த குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் முருகனின் பாதங்களில் வையுங்கள். அவர் உங்களுக்கு நல்லதொரு தீர்வை உடனடியாக காட்டுவார். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடுதான் இந்த செவ்வாய்க்கிழமை ராகு கால முருகன் வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முருகப்பெருமானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு சந்தோஷமான, மன நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.

Related Stories: