×

இந்தியத் தயாரிப்பு சொகுசு எலெக்ட்ரிக் கார்

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இகியூஎக்ஸ் 580 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் உருவான இந்த சொகுசு எலெக்ட்ரிக் கார், புனேயில் உள்ள இந்த நிறுவன தொழிற்சாலையில் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இகியூஎஸ் 53க்கு பிறகு இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் கார் இது.   இதன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.55 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை ரூ.2 கோடிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கார் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 108 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4 மோட்டார்கள் உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 523 பிஎச்பி பவரையும்   856 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 857 கி.மீ தூரம் வரை செல்லலாம். பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 3.5 நொடிகளில் எட்டும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது….

The post இந்தியத் தயாரிப்பு சொகுசு எலெக்ட்ரிக் கார் appeared first on Dinakaran.

Tags : Mercedes-Benz ,Germany ,Dinakaran ,
× RELATED இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் :...