×

பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை: எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கண்காணிப்பாளராக பணிபுரிந்த சிவச்செல்வம் ஓய்வு பெற்றபின் நிதிநிறுவனம் தொடங்கி 10 சதவீதம் வட்டி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டார். 10 சதவீதம் வட்டி தருவதாக ரூ.66 லட்சம் வசூலித்து பணமோசடி செய்ததாக 20 பேர் கொடுத்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2012ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது….

The post பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை: எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Elampur ,Chennai ,Elehampur ,court ,Lumpur Court ,Dinakaran ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...