21 நாட்கள் விரதம் இருந்து வழிபாட்டால் நினைத்த காரியம் நிறைவேற்றும் முருகன் வழிபாடு..!!

அழகில் சிறந்த முருக பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால் நம்முடைய நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவார். முருக பெருமானை நினைத்து 21 செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

முருகனிடம் முழு பக்தியுடன் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள், நோய்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, காதல் கை கூட, திருமண தடை அகல இந்த பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்.

முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்க வேண்டும். இதனை நாம் நேரடியாக வாங்குவதை விட நம்முடைய, குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாக வாங்க வேண்டும். இதனால் அவர்கள் ஆசிர்வாதத்துடன் இந்த வேலை நாம் பெறுகிறோம். இதனால் கடவுளின் அருளும் நமக்கு கிட்டும். மேலும் கோவிலில் குருக்களிடம் காசை குடுத்து கூட இந்த வேல் வாங்கலாம்.

அந்த வேல் மீது மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். இப்பொழுது செம்பினால் ஆன சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சொம்பை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து அதனுள் விபூதியை நிரப்ப வேண்டும். இப்பொழுது இந்த வேலை அதனுள் சொருக வேண்டும். அதன்பிறகு பூக்களை வேல் மீது சுற்றி வைக்க வேண்டும். அதன் பின் உதிரி பூக்களை எடுத்து ‘ஓம் முருகா’ என்று கூறி பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவ்வாறு 108 முறை செய்ய வேண்டும். இதனை முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையில் செய்து வர வேண்டும். இதனால் முருகனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். மேலும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் இதனை 21 வாரங்கள் செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.

Related Stories: