×

வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் தில்லான்  கேம்ப்பெல்(29). ஜமைக்காவை சேர்ந்த இவர்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2019ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஊக்கமருந்து   தடுப்பு விதிகளை மீறியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் 3 உறுப்பினர்களை கொண்ட சுயேட்சைக்குழு  ரத்த, சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க ஏப்ரல் மாதம் முயன்ற போது, ஜான் அதற்கு ஒத்துழைக்கவில்லையாம். அதனடிப்படையில் மாதிரிகளை சேகரிக்க மறுப்பு, தவிர்ப்பது அல்லது சமர்ப்பிக்க தவறியது போன்ற விதி மீறல்கள் காரணமாக  ஜானுக்கு 4  ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிப்பத்தாக  ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நேற்று  அறிவித்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஜான் கேம்ப்பெல் 137பந்துகளில் 179ரன் விளாசியது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஆட்டமாகும்….

The post வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Indies ,John Dillon Campbell ,Jamaica ,West Indies ,Dinakaraan ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...