×

எல்கேஜிக்கு ஸ்பெஷல் ஷோ ; விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி மோதல்

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் எல்கேஜி. நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு முதல் நாளில் தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. உடனே விஷ்ணு விஷால், ‘சிறப்பு காட்சிக்கான மதிப்பு குறைந்து வருகிறது’ என தடாலடியாக ஒரு கருத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘மற்றவர்களின் பணியை மதிக்க தெரிந்துகொள்ளுங்கள்’ என பாலாஜி கூற, ‘முதலில் உங்களை சுற்றியுள்ளவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என விஷ்ணு பதிலடி தர டிவிட்டரில் மோதல் முற்றியது.

தொடர்ந்து வார்த்தைகளால் இவர்கள் தாக்கிக் கொண்டனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகு, எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னை தீர்ந்தது. எல்கேஜி வெற்றி பெற வாழ்த்துகள்’ என விஷ்ணு டிவிட் போட, பாலாஜியும் அதையே கூறி வார்த்தை மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Tags : conflict ,Vishnu Vishal - RJ Balaji ,
× RELATED ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்