×

திருப்பணிக்காக காத்திருக்கும் திருத்தலம்

அயிலவாடி, திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள அயிலவாடி கிராமத்தில் ஒரு சிவாலயம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் கீழே சுமார் 800 வருட பழமைவாய்ந்த சிவன் கோயில் பராமரிப்பின்றி ஏரிக்கரையின் மண்மேட்டினால் மறைக்கப்பட்டு, புதைந்து கிடக்கின்றது. அரிய சிற்ப வேலைபாடுகள் கோயிலின் உட்பகுதியில் காணப்படுகின்றது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கக் கூடும் என்பது இங்கு நிலவும் கருத்து.

முன் மண்டபம், அந்தராளம், கருவறை அமைப்பில் உள்ள இவ்வாலய நந்திதேவர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. அதோடு, மகாமண்டபத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் புடைப்புச் சிற்பம் கவினுர வடிக்கப்பட்டுள்ளது. அம்பாளின் பீடம் மட்டும் உள்ளது.  அம்பாள் சிலை இல்லை. இந்த தல ஈசர் ஸ்ரீநாகநாதர் என்று அழைக்கப்படுகின்றார். திருப்பணிகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர் இவ்வூர் மக்கள். இந்த கோயிலை குறித்தோ அல்லது கைங்கரியம் செய்யவோ தொடர்புக்கு முருகவேல் - 9786497515. வந்தவாசி - ஆரணி பேருந்து சாலையில் வந்தவாசியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அயிலவாடி.

- மோ.கணேஷ்

Tags :
× RELATED சுந்தர வேடம்