பிரபாஸூடன் இணைந்து நடிக்க அஜீத் ஆர்வம்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் திடீரென்று பிரபல அரசியல்வாதிகளை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் அரசியலே வேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்த அஜீத் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படத்தையடுத்து தனது 59வது படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதுபற்றி அஜீத் விசாரித்து தெரிந்துகொண்டார். மோகன்லால் நடிக்கும் மலையாள படத்தை பிரியதர்ஷன் இயக்கும் படப்பிடிப்பு நடந்து வரும்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று விசிட் செய்த அஜீத் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்ஷன் இருவரையும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதையறிந்து அவரது அரங்கிற்கு விஜயம் செய்தார். அஜீத்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ், ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் ராணா நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின்போது ராணா பகிர்ந்துகொண்டதாக தெரிவித்ததுடன் அஜீத்தின் நற்பண்புகளை பாராட்டினார்.

மேலும் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறினார். அதேபோல் பிரபாஸுக்கு புதிய படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் அஜீத். சுமார் ஒரு மணிநேரம் பிரபாஸுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜீத் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜீத் தெரிவித்தார்.

Tags : Ajith ,Prabhas ,
× RELATED அஜீத் படத்தில் வில்லி?....