×

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் திடீர் ஆய்வு

சென்னை: மண்ணிவாக்கம் ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தை அமுதா ஐஏஎஸ்  திடீரென ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அருகில் ₹24 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் அமுதா நேற்று மாலை திடீரென சென்று நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் இயக்குனர்கள் குமார், ராஜ, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், திட்ட இயக்குனர் செல்வகுமார், காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ட ராகவன், சாய்கிருஷ்ணன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் கெஜலட்சுமி சண்முகம், துணை தலைவர் சுமதி லோகநாதன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தூய்மை பணியாளர்களை அழைத்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை இயந்திரத்தில் எப்படி அரைக்கிறீர்கள் என்று, செயல்முறை விளக்கத்தை கேட்டறிந்து, பின்னர் அதனை செயல்படுத்தி காட்டும்படி கூறினார். இதனையடுத்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தை சரியான முறையில் பராமரித்து அதனை சிறப்பாக செய்து வருகிறீர்கள் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டினார். …

The post நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Amuda IAS ,CHENNAI ,Amudha IAS ,Mannivakkam panchayat ,Chengalpattu District ,Kattankolathur… ,Amutha IAS ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...