×

கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய தேர்வுக்குழு; அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய தேர்வுக்குழு அமைத்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில்  பணிபுரியும் பூசாரிகளின் ஓய்வூதியம் வேண்டி வரப்பெறும் விண்ணப்பங்களை  பரிசீலித்து அதனை பரிந்துரை செய்வதற்கு தேர்வு குழு அமைத்து இந்து சமய அறநிலையத்துறை அரசாணை  வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கிராம கோயில்  பூசாரிகள் ஓய்வூதிய திட்ட தேர்வு குழுவில் அலுவல்சாரா உறுப்பினராக  சேலம் மாவட்டம் கோயில் பூசாரி நலச்சங்க தலைவர் வாசு கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது அவருடைய பணிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய அலுவல்சாரா உறுப்பினரை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை அலுவல்சாரா உறுப்பினராக இருந்த வாசு தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காத காரணத்தினால், அவரது விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வுக்குழு அமைக்க உத்தரவிடப்படுகிறது. செயல் அழுவலராக வாசு மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய தேர்வுக்குழு; அறநிலையத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Selection Committee ,Charities Department ,CHENNAI ,Department of Charities ,Village Temple Priests ,Endowment Department ,Dinakaran ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...