×

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் அழிப்பு..

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், சென்னை பெருநகர காவல்துறையில் போதை பொருட்கள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845.83 கிலோ கஞ்சா மற்றும் கெட்டமைன் போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில், எரித்து அழிக்கப்பட்டது. பல்வேறு போதை பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட பொருட்களை வைப்பதற்கான இட வசதி கருதியும், வழக்கு தொடர்புடைய போதை பொருட்களை உரிய முறைப்படி அழிக்க குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.அதன்பேரில், சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்  போதைப்பொருள் பழக்கத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வடக்கு மண்டல இணை ஆணையாளர் R.V.ரம்யாபாரதி, இ.கா.ப., தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் G.நாகஜோதி மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் A.விசாலாட்சி ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழுவினை அமைத்தார்.இக்குழுவினர் போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் (Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின்னர் நிலுவையிலுள்ள 30 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 811 கிலோ 650 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 14 கிலோ 830 கிராம் கெட்டமைன் போதை பொருட்கள் என மொத்தம் 826 கிலோ 480 கிராம் போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. மேலும், போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மேல்முறையீட்டு காலம் முடிந்த 27 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 19.360 கிலோ கஞ்சா போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. அதன்பேரில், இன்று (08.10.2022) காலை, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான இரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், நீதிமன்றங்களின் ஆணைகளின் படி மொத்தம் 57 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 831 கிலோ கஞ்சா மற்றும் 14.83 கிலோ  கெட்டமைன் போதைப் பொருள் என மொத்தம் 845.83 கிலோ போதைப்பொருட்கள், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.கடந்த 25.06.2022 அன்று 68 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா  மற்றும் 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் ஆகிய போதை பொருட்கள் நீதிமன்றங்கள் ஆணைப்படி உத்தரவுப்பெற்று காவல் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. …

The post சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்கள் அழிப்பு.. appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police ,Commissioner ,Shankar Jiwal ,Chennai ,Chennai Metropolitan Police Commissioner ,Metropolitan Police Commissioner ,Dinkaran ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...