சசிகுமாரின் நாடோடிகள் 2 ரிலீஸ் குறித்த தகவல்

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாடோடிகள்'. காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள் மற்றும் அவர்கள் மனதில் உள்ள அழகிய காதல், அதன் தோல்வியால் வரும் வலி என உணர்வுப் பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குநர் சமுத்திரக்கனி.

பின்பு 11 வருடங்களுக்குக் களைத்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2 ' எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இதில் அதுல்யா ரவி, பிக்பாஸ் புகழ் பரணி, நமோ நாராயணா, ஞானம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம்  வரும் மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

More