×

சசிகுமாருக்கு ஜோடிபோடும் நிக்கி

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், கொம்பு வச்ச சிங்கமடா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வரும் சசிகுமார், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். சசிகுமாருடன் நிக்கி இணையும் முதல்படம் இது. பெயரிடப்படாத இப்படத்தை சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கதிர்வேலு  இயக்குகிறார். இது சசிகுமார் நடிக்கும் 19வது படம்.

மேலும் இப்படத்தில் ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதீஷ், மனோ பாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நமோ நாராயணன், நிரோஷா, யோகி பாபு என 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். டிடி.ராஜா தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு. சாம்.சிஎஸ் இசை. இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

Tags : Nicky ,
× RELATED ஐநா தூதர் பதவியில் இருந்து விலகிய...