×

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞருக்கு அறிவிப்பு

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.நோபல் பரிசுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கௌரவமாகவும் அமைதிக்கான நோபல் பரிசு கருதப்படுகிறது. 2022ம் ஆண்டின்ற்காகன அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு 2 அமைப்புகள் மற்றும் ஒரு தனிநபருக்கு என 3-ஆக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்கிற தனி நபருக்கும் ரஷ்யாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான ‘MEMORIAL’ என்ற அமைப்பிற்கும், உக்ரைனை சேர்ந்த மனித உரிமை அமைப்பான CENTER FOR CIVIL LIBERTIES என்ற அமைப்பிற்கும்  இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் பல ஆண்டுகளாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அதிகார துஸ்பிரயோகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தமைக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர போர் குற்றம், மனித உரிமை விதிமீறல்கள், அதிகார துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை மிக சிறப்பான முறையில் ஆவணப்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Belarus ,Alas Pialiatsky.… ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா