×

மேரி, குயின் ஆஃப் ஸ்காட்ஸ்

ஜோசி ரோர்க் இயக்கத்தில் சயோர்ஸ் ரோனன், மார்கட் ரோபி, ஜேக் லோடென், ஜோ ஆல்வின், உள்ளிட்ட படல் நடிப்பில் வெளியாகியுள்ள பையோகிராபி படம் ‘மேரி, குயின் ஆஃப் ஸ்காட்ஸ்‘ ராணி மேரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இரண்டு சகோதரிகளுக்கு இடையில் நடக்கும் மகுடத்திற்கான போராட்டம். அடுத்த ராணி யார் என்ற கேள்விகளுடன் இரண்டு ராணிகள் மேரி ஸ்டுவார்ட் (சயோர்ஸ் ரோனன்) மற்றும் குயின் எலிசபெத் 1(மார்கட் ரோபி). சட்டபடி ஆட்சியைப் பிடிக்கும் அதிகாரம் குயின் மேரி ஸ்டுவர்ட்க்கு உண்டு. முறையான வாரிசும் அவர்தான். ஆனால் கத்தோலிக்கர்களால் வளர்க்கப்பட்ட எலிசபெத் ஆட்சி அமைக்க வேண்டும் என்றே தீர்ப்பு வருகிறது. எப்படியேனும் தனக்கான உரிமையை பெற வேண்டும் என போராடுகிறார் மேரி. முடிவு என்ன என்பது மீதிக் கதை.

‘சயோர்ஸ்க்கு நிச்சயம் அடுத்த வருட ஆஸ்கர் பரிந்துரைப்பட்டியலில் ஒரு இடம் உண்டு . அந்த அளவிற்கு நடிப்பை உள்வாங்கி ராயல் ராணியாகவே தன்னை பிரதிபலித்திருக்கிறார். மார்கட் ரோபி கண்டிப்பாக இவருக்கும் குணச்சித்திர பட்டியலில் இடம் உண்டு.

நாடகத்திலிருந்து பட இயக்கத்திற்கு வந்ததாலோ என்னவோ மிகப் பொறுமையாக நிதானமாகவே கதை சொல்லியிருக்கிறார் ஜோசி ரோர்க். கொஞ்சம் கவனமாக கையாளப்பட வேண்டிய வரலாற்றுக் கதை என்பதால் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

மன்னர் கால கதை என்றாலே உடைகள் , மேக்கப் என அதீத கவனம் செலுத்த வேண்டும்.  ஆச்சர்யம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் வரலாற்றில் பதிவிடப்பட்ட பீரியட் கால கதை எனில் இன்னும் கவனமாக செயல் பட வேண்டிய அவசியம் புரிந்து மேக்கிங்கில் முழு ஈடுபாடு கொடுத்துள்ளனர்.

அந்தக்கால ஆங்கில ராயல் காலத்தை அப்பட்டமாக கண் முன் காட்டுகிறது ஜான் மேத்திசனின் ஒளிப்பதிவு. காட்சிக்கு ஏற்ப பிரம்மாண்டம் அமைக்கிறது மேக்ஸ் ரிட்சரின் இசை.

மொத்தத்தில் டிராமா, பையோபிக் படங்களின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக வெளியாகியுள்ளது ‘ மேரி, குயின் ஆஃப் ஸ்காட்ஸ்

Tags :
× RELATED டிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது...