லெஸ்பியனாக இருந்தால் என்ன தப்பு? நடிகை ரெஜினா அதிரடி கேள்வி

ஆண், பெண் உறவு நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஹோமோ செக்ஸ் எனப்படும் ஆணுக்கும் ஆணுமான உறவு, லெஸ்பியன் எனப்படும் பெண்ணுக்கும் பெண்ணுமான உறவு கலாச்சாரமும் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. கடந்த 1996ம் ஆண்டு நந்திதாதாஸ், சப்ஷனா ஆஷ்மி நடித்த ஃபயர் திரைப்படம் லெஸ்பியன் கதையாக உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அப்படம் திரைக்கு வந்தது. தற்போது காலசூழல் மாறியிருப்பதால் அடல்ட் படங்கள் வரிசை கட்டுகின்றன. இந்நிலையில் இந்தியில் லெஸ்பியன் கதை அம்ச படமாக உருவாகிறது. ‘ஏக் லட்கி கொ தேக்ஹா டோ ஐசா லகா’. இப்படத்தை பெண் இயக்குனர் ஷெல்லி சோப்ரா தஹர் இயக்குகிறார். லெஸ்பியன் படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்குகிறார் என்பது புதிய விஷயமல்ல ஃபயர் படத்தை இயக்கியதும் பெண் இயக்குனர் தீபா மேத்தா என்பவர்தான். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரம் ஏற்றிருப்பதுதான். மற்றொரு கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

லெஸ்பியன் பாத்திரத்தில் நடிப்பதுபற்றி ரெஜினா கூறியதாவது: நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் ஹோமோ செக்ஸ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. மக்களும் அதை மெதுவாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். தற்போது நான் நடித்து வரும் இப்படம் எந்த எதிர்ப்பையும் சந்திக்காது என்று எண்ணுகிறேன். காதல் படம் எல்லாமே ஒரே பாணியில்தான் இருக்க வேண்டுமா? இன்றைக்கு லெஸ்பியன் உறவு பற்றி கலந்துரையாடுகிறார்கள். மக்களிடை யே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய சில நண்பர்கள் ஹோமோசெக்ஸை தர்ம சங்கட மாக உணர்கிறார்கள். யார் எப்படி வாழ வேண்டுமோ அவர்கள் விருப்பபடி வாழட்டுமே.. தென்னிந்திய நடிகையாக மட்டுமே நான் இருக்க விரும்பவில்லை. இந்தி திரையுலகிலும் எனது திறமையை நிரூபிக்கவே இப்படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: