×

சண்டை காட்சியில் விபத்து: விஷ்ணு கை எலும்பு முறிவு

ஹீரோ, ஹீரோயின் பலர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதற்காக பிரத்யேக பயிற்சி மேற்கொள்வதுடன் காட்சியின்போது டூப் போடாமல் நடிக்கவும் துணிகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் அமலாபால், தன்ஷிகா, ஹன்சிகா ஆகியோர் ஆக்‌ஷன் காட்சியில் நடித்து காயம் அடைந்தனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சில தினங்களுக்கு முன் புதிய படத்துக்கு ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறும் ேபாது,’சண்டையில் ஈடுபட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் எனது கழுத்து, முதுகெலும்பு, தோள்பட்டை எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். கடும் வலியால் துடித்தாலும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக என்னால் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. இதையே தொழிலாக செய்யும் ஸ்டன்ட் நடிகர்களுக்காக இதயம் நிறைந்த எனது பிரார்த்தனைகள் செய்கிறேன்’ என்றார் விஷ்ணு விஷால்.

Tags : scene ,Vishnu ,
× RELATED திருப்பத்தூரில் கடத்தப்பட்ட...