×

கெலவரப்பள்ளி அணையில் பொங்கி வரும் ரசாயன நுரை; விவசாயிகள் கவலை

ஓசூர்: தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் கர்நாடகா மாநிலம் நந்திமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 931 கனஅடியாக அதிகரித்தது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் 988 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகா மாநிலத்தின் ஆற்றங்கரையோரமாக உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் ரசாயன கழிவுநீர் கலப்பால், தென்பெண்ணை ஆற்றில் கடும் நுர்நாற்றம் வீசியபடி, நுரை பொங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு, அதிகப்படியாக நுரை பொங்கி ஆற்றில் வெளியேறி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆற்றில் ரசாயனம் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கெலவரப்பள்ளி அணையில் பொங்கி வரும் ரசாயன நுரை; விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli Dam ,Nandimala ,Karnataka ,Tenpenna River ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி