×

ஒப்பற்ற ஆபரணம் ருத்திராட்சம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவனடியார்கள் அனைவரும் கட்டாயமாக அணிய வேண்டியவை விபூதியும் ருத்திராட்சமும் ஆகும். ஒருவரைக் கண்ட மாத்திரத்திலேயே இவர் சிவனடியார் என்று இனம் காட்டி வணங்கச்செய்வது இவ்விரண்டுமாகும். திருநீறாவது நீராடுதல், வியர்வை போன்றவற்றால் உடலைவிட்டு அகலும். ருத்திராட்சமோ, நாமாக அகற்றினாலன்றி தாமாக அகலாத அடையாளமாக இருக்கிறது.

மணமான பெண்ணுக்குத் திருமாங்கல்யம் அடையாளமாக இருப்பதுடன், அவளுக்குச் சமூதாயத்தில் மதிப்பைத் தருவது போல, சிவனடியில் மனம் பதித்து ஆட்பட்டோருக்கு ருத்திராட்சம் அடையாளமாகும். மதிப்புகூட்டும் அணிகலனாகவும் இருக்கிறது.விபூதியும், ருத்திராட்சமும் உயிர்க்கு உறுதியைத் தருவதுடன், உடலுக்கு அழகைத் தருகின்றன. சிவவேடப் பொலிவைத் துதிப்பதும், வணங்குவதும் அடியவர்களுக்கு விருப்பமான செயலாகும்.

நவரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட பொன்னாபரணங்களை, உடலெல்லாம் அணிந்திருப்பது செல்வச்செழிப்பையும் வாழ்வின் வளத்தையும் காட்டுமே தவிர, உயிருக்குப் பயனாவதில்லை. ருத்திராக்கமணி ஒன்றை அணிந்திருந்தால் அது உயிருக்கு நலமளிக்கிறது.ருத்திராட்சத்தைப் பாலில் உறைத்தும், தேனில் உறைத்தும் அவற்றைப் பருகிவந்தால், தீராத நோய்களும் தீரும் என்று சித்த வைத்தியம் கூறுகிறது.

தொகுப்பு: நாகலட்சுமி

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்