×

ஸ்ரீதேவி கதையை கைவிட முடியாது; போனி கபூருக்கு டைரக்டர் பதில்

ஸ்ரீதேவி கதையை படமாக்குவதிலிருந்து பின்வாங்க முடியாது என போனி கபூருக்கு பதில் கூறியுள்ளார் டைரக்டர் பிரசாந்த் மாம்புலி. கடந்த ஆண்டு துபாயில் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். ஓட்டல் அறையில் இருந்த பாத்ரூம் டப்பில் அவர் சடலமாக கிடந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் இந்தியில் படம் உருவாகிறது. இதை பிரசாந்த் மாம்புலி இயக்குகிறார். இதில் புருவ அழகி பிரியா வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் தலைப்பை வைத்து இது ஸ்ரீதேவியின் கதையாக இருக்கும் என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நீச்சல் உடையில் பிரியா வாரியர் தோன்றுகிறார். பல கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அவரது வேடம், நடிகையை போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. டீசர் முடியும்போது, பாத்ரூம் டப்பில் பிரியாவின் கால்கள் மட்டும் தெரிவது போல் காட்சி இடம்பெறுகிறது. இது எல்லாமே இது ஸ்ரீதேவியின் மரணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் என ரசிகர்களை பேச வைத்துள்ளது.

இது தொடர்பாக டைரக்டருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அனுமதியின்றி யாரும் ஸ்ரீதேவியின் கதையை படமாக்க முடியாது. படத்தை கைவிட அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பிரசாந்த் மாம்புலி கூறும்போது, ‘இது ஸ்ரீதேவியின் கதையா இல்லையா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் இது நடிகையின் கதைதான். அந்த நடிகையை தவறாக நான் சித்தரிக்கவில்லை. படத்தை கைவிட முடியாது. படத்தின் தலைப்பையும் மாற்ற முடியாது’ என்றார்.

Tags : Bonnie Kapoor ,Sridevi ,
× RELATED ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றுக்கு எதிராக...