×

எம்பார்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கோவிந்தர் என்பவர் இராமானுசரின் சிறிய தாயார் மகன் இவரே குரு யாதவப் பிரகாசர் இராமனுசரைக் கொலை செய்யத் திட்டமிட்டபோது காத்தவர். திருமலையில் திருமலை நம்பிகளுக்குக் கோவிந்தர் தொண்டுசெய்து வாழ்ந்து வந்தார்.ராமனுசர் திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்கத் திருமலை சென்றார். அங்கே அவர் பாம்புக்கும் அருளும் அருள் உள்ளத்தைக் கண்டார். கோவிந்தர் நந்தவனத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாகம் தன் தலையை மேலும் கீழும் புரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

உற்றுப் பார்த்தபோது, அதன் நாக்கில் எப்படியோ பெரிய முள் தைத்திருந்தது. அந்நாகம் கொடியதே, அதனுடைய நாவுப் பையில் நஞ்சு தங்கியுள்ளதே என்று கலங்காமல், அஞ்சாமல் கோவிந்தர் அதனருகில் சென்று அதனைப் பிடித்து முள்ளை எடுத்து அதற்கு ஏற்பட்ட துயர் களைந்தார் அதனைத் துன்பத்திலிருந்து விடுபட்டுச் செல்லச் செய்தார்.ராமானுசர் இதனைக் கண்டு அகமகிழ்ந்து, கோவிந்தரை திருமால் நம்பிகளிடமிருந்து தமக்குரிய பரிசாகப் பெற்றுத் திருவரங்கம் வந்தார் ‘எம்பார்’ எனும் சிறப்புப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்