×

மயிலாடும்பாறை அருகே சீராக குடிநீர் வழங்க கிராம மக்கள் வலியுறுத்தல்

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட பின்னத்தேவன்பட்டியில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் உரை கிணறு அமைத்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர்  சப்ளை செய்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே பின்னத்தேவன்பட்டிக்கு முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குடிநீருக்காக தனியார் தோட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்திற்கு தெருவிளக்கு, முறையான சாக்கடை, தெருக்களில் சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பின்னத்தேவன்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மயிலாடும்பாறை அருகே சீராக குடிநீர் வழங்க கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mayiladumpara ,Theni District, ,Kandamalaya-Mayilai Union ,Nariyoothu Nuraduthi ,Mayiladumbara ,
× RELATED பன்றிகளை அப்புறப்படுத்த கோரிக்கை