×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறுவது நிச்சயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறுவது நிச்சயம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக பொதுக்குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியதாவது: கலைஞர் நம்மிடையே இன்று இல்லை. அவர் இருந்து இருந்தால் எப்படி கட்சி தேர்தலை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தி முடித்து இருப்பாரோ, அதேபோல், கலைஞர் வழியில் நீங்கள் கட்சி தேர்தலை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். 2021 சட்டமன்ற தேர்தலிலே மிகப்பெரிய வெற்றியை அளித்து முதல்வராக அமர வைத்து மக்கள் அழகு பார்த்து இருக்கிறார்கள்.நீங்கள் தலைவராக பொறுப்பேற்று அத்தனை தேர்தலிலும் வெற்றி. கிட்டத்தட்ட 4 தேர்தலில் தொடர்ச்சியாக நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இந்த வெற்றி நிச்சயமாக தொடரும். தமிழக மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் அந்த மக்களுக்காக முதல்வராக அல்லும், பகலும் அயராது உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பை பார்க்கும்போது எங்களுக்கு பொறாமையாக இருக்கும். எப்படி இப்படி உழைத்து கொண்டு இருக்கிறார் என்று. அந்த வெற்றிக்குக்கு உங்களுடைய பிரசாரம், 50 ஆண்டுகாலம் உழைப்பு ஒரு முக்கிய காரணம்.தமிழக மக்களும் ஒரு காரணம் உங்களை தேர்ந்தெடுத்தார்கள். உங்கள் பிரசாரத்தையும், உங்கள் உழைப்பையும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்த தொண்டர்கள் ஒவ்வொருவரும் காரணம். அந்த தொண்டர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் கண்டிப்பாக உரிமை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். திமுகவில் உள்ள 19 அணிகளுக்கும் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் நிச்சயம் வெற்றி பெற போவது உறுதி. சென்ற பாராளுமன்ற தேர்தலை விட மிகப்பெரிய வெற்றியை பெற நீங்கள் எங்கள் அத்தனை பேருக்கும் கட்டளையிடுங்கள். கட்டளையை ஏற்று அந்த வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்….

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறுவது நிச்சயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dzakshagam ,Udhayanidhi Stalin ,Chennai ,Disgam ,Dhasagam ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...