×

இந்தியா சென்றால் ஜாக்கிரதை ஒரே ஆண்டில் 4ம் எச்சரிக்கை: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா வெளியிட்ட பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது. உலக நாடுகளில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல், பொது சுகாதாரம் பிரச்னை, சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில், பாதுகாப்பானது, மிகவும் ஆபத்தானது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என்று 4 நிறத்தில் வகைப்படுத்தி, தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா பயண அறிவுறுத்தலை வெளியிட்டு வருகிறது. இதில், இந்தியாவுக்கான அமெரிக்காவின் பயண அறிவுறுத்தலில் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையாக மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். கொரோனா கால கட்டத்தில் மட்டும் சிகப்பு நிற பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களின் அடிப்படையில், இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி (முதல்நிலை – வெள்ளை நிறம்) அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா கடந்த ஜனவரி 24, மார்ச் 28 மற்றும் ஜூலை 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கான பயண அறிவுறுத்தல்களை வெளியிட்ட நிலையில், கடந்த புதன்கிழமை 4வது முறையாக பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது….

The post இந்தியா சென்றால் ஜாக்கிரதை ஒரே ஆண்டில் 4ம் எச்சரிக்கை: அமெரிக்கா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,US ,WASHINGTON ,Americans ,America ,Dinakaran ,
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...