×

சஞ்சீவியை கொணர்ந்த சிரஞ்சீவி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சென்னை - நங்கநல்லூர்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்(டு) அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்!
“ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கநவாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்”


- என்கிற மந்திரத்தின் கருணாமூர்த்தியாக விளங்குபவர் ராம பக்த அனுமன்.

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங்கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சென்னை - நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிவ்யாதிஹர ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆலயம் திகழ்கிறது. ஸ்ரீராம ரட்சை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்தது இத்தலமாகும். பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றித் தருகிறார் இந்த ஆஞ்சநேயர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் ஸ்ரீஅனுமன் ஜெயந்தி மஹோற்சவம் வருகின்ற நாள் 15.12.2022 வியாழக்கிழமை முதல் 25.12.2022 ஞாயிற்றுக்கிழமை வரை மிக விமர்சையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 19.12.2022 திங்கள்கிழமை மாலை யாக சாலை பூஜைகள் ஆரம்பமாகி 23.12.2022 ஸ்ரீஅனுமன் ஜெயந்தி தினம் வெள்ளிக்கிழமை வரை, ஏழு காலங்களாக மஹாசாந்தி, மூலமந்திரஜபம், ஹோமங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த மஹோற்சவ நிகழ்ச்சியில்  ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமிக்கு லட்சார்ச்சனையும், சந்தனக்காப்பு அலங்காரமும், பால் அபிஷேகமும், லட்சார்ச்சனை பூர்த்தி அன்று சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயரின் அருளைப் பெறுவோமாக.

தொகுப்பு - குடந்தை நடேசன்

Tags : Chiranjeevi ,Sanjeevi ,
× RELATED ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்