×

பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்: விசிகவினர் நேரில் சந்தித்து ஆதரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 52 அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களில் 2500 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு கடந்த 10, 15 ஆண்டுகளாக விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு, பி.எட் போன்ற கூடுதல் கல்வி தகுதி உடைய 1311 பேர் தேர்வு செய்யப்பட்டு, பகுதி நேர பணியிலிருந்து முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு ரூ.15 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். இந்நிலையில் அக்கல்லூரிகளில் காலியாக இருந்த நிரந்தர பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி சார்பில் போட்டி தேர்வு நடத்தி 1,024 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,311 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 1,311 தொகுப்பூதிய விரிவுரையாளர்களும் தங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டியும், பணி நீக்கம் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க கோரியும் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் கடந்த 6ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணிநீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய விரிவுரையாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொது செயலாளரும், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்காலிக விரிவுரையாளர்களுக்கு மறுபடியும் பணி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் வேண்டுகோள் விடுத்தார்….

The post பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்: விசிகவினர் நேரில் சந்தித்து ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...