×

அன்னதானத்தை தடையின்றி செயல்படுத்த கோயில்களின் உபரி நிதி விவரத்தை தர வேண்டும்: ஆணையர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தற்போது 754 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில கோயில்களில் செலவிற்கான போதிய நன்கொடை வரப்பெறாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய கோயில்களில் நிதி பற்றாக்குறையை ஈடு செய்தால் மட்டுமே அன்னதான திட்டம் சிரமமின்றி நடைபெறுவது சாத்தியமாகும். நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள கோயில்களுக்கு உரிய நிதி உதவி அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே அன்னதான திட்டத்தில் உபரி நிதி உள்ள கோயில்களின் உபரி நிதியினை பெற்று நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள கோயில்களுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு கோயில்களிலுள்ள அன்னதான திட்ட உபரி நிதி (சேமிப்பு வங்கி கணக்கு இருப்பு மற்றும் உபரி நிதி முதலீடு உள்ளிட்டவை) விவரங்களை (பக்தர்கள் ஆண்டு தோறும் தங்களது பிறந்த நாள், திருமண நாளான்று அன்னதானம் செய்திட வழங்கிய தொகைக்கான முதலீடுகளை தவிர்த்து ) கடந்த மாதம் 30ம் தேதி நிலவரப்படி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் நிலையில் நிர்வகிக்கப்படும் கோயில்கள் நேரிடையாகவும், இதர பட்டியலை சார்ந்த மற்றும் பட்டியலை சாராத கோயில்களின் விவரங்களை மண்டல இணை ஆணையர்களும் 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது….

The post அன்னதானத்தை தடையின்றி செயல்படுத்த கோயில்களின் உபரி நிதி விவரத்தை தர வேண்டும்: ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hindu Religious Charities ,Commissioner ,Kumaragurubaran ,Hindu Religious Charities Department ,
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!