×

சென்னை துறைமுக மாஜி அதிகாரி மீது தாக்குதல்: பெண் உள்பட 3 பேர் கைது

பெரம்பூர்:  கொடுங்கையூர் முத்தமிழ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சந்தானம் (65). இவர் சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். துறைமுகத்தில் ஓய்வு பெற்ற பணியாளர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். இவருக்கும் வியாசர்பாடி பாரத மாதா தெருவை சேர்ந்த மணிமேகலை (42) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த பெண்ணிடம் கொடுத்த பணத்தை சந்தானம் திரும்ப கேட்டபோது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிமேகலை, கடந்த 6ம் தேதி நண்பர்களுடன் சந்தானம் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இரும்பு ராடால் சந்தானத்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த சந்தானம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து மணிமேகலை, பெரம்பூர் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த விஜய் (22), ரமணா நகரை சேர்ந்த பார்த்திபன் (21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post சென்னை துறைமுக மாஜி அதிகாரி மீது தாக்குதல்: பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai port ,Perambur ,Santhanam ,First Street ,Kodunkaiyur Muthamil Nagar ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!