×

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7.32 லட்சம் கையாடல்: 4 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு, பண வசூலிப்பு துறை மேலாளராக ஏசுதாஸ் (45) வேலை செய்து வருகிறார். இதுபோல் மணலி புதுநகரை சேர்ந்த டேனியல் ஆண்டனி (36), தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த அருள் செல்வம் (36), மாதவரம் விஜயா நகரை சேர்ந்த சசிகுமார் (40), வில்லிவாக்கம் வள்ளியம்மாள் நகரை சேர்ந்த சரவணன் (37) மற்றும் சுரேஷ் (38) ஆகிய 5 தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர்.கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த தவணை தொகை 7,32,236 ரூபாய் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் ஏசுதாஸ், திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஊழியர்களான ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன், சுரேஷ் ஆகியோர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஊழியர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர். …

The post தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7.32 லட்சம் கையாடல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvatthur ,Thiruvattur Bus Station ,Esudas ,Cash Collection Department ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை