×

உத்தரகாண்ட் பனிச்சரிவு மேலும் 10 உடல்கள் உத்தர்காசி வந்தன

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் 29 பேர் கொண்ட குழு கடந்த 4ம் தேதி மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். இவர்கள் 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்தபோது கடுமையான பனிச்சரிவில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், விமானப்படை மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் களமிறக்கப்பட்டனர். 6வது நாளாக நேற்றும் தேடுதல் பணி தொடர்ந்தது. , இது குறித்து நேரு மலையேற்ற பயிற்சி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், `இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 21 பேரது உடல்கள் உத்தர்காசி கொண்டு வரப்பட்டுள்ளன. காணாமல் போன 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது,’ என்று தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு 4, நேற்று முன்தினம் 7 உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மேலும் 10 பேரின் உடல்கள் நேற்று உத்தர்காசிக்கு கொண்டு வரப்பட்டன….

The post உத்தரகாண்ட் பனிச்சரிவு மேலும் 10 உடல்கள் உத்தர்காசி வந்தன appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Avalanche ,Uttarkashi ,Dehradun ,Tirupati Ka Thanda ,Uttarakhand ,Avalanche ,Dinakaran ,
× RELATED கேதார்நாத்தில் நிலை தடுமாறிய ஹெலிகாப்டரால் பரபரப்பு