×

திருக்கார்த்திகை சில தகவல்கள்

*விளக்கின் திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து நிற்கிறாள். அதனால் விளக்கினை வீட்டில் ஏற்றி வைத்து அருள் பெற வேண்டும். இப்படி மகாலட்சுமி இருக்கும் திருவிளக்கை முறைப்படி ஏற்றி வைத்தால் அதிக பலனைப் பெற்று நலமுடனும், செல்வ செழிப்புடனும் வாழலாம்.

*ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய கிழமைகளில்தான் விளக்கினை துலக்க வேண்டும். மற்ற கிழமைகளில் விளக்கை துலக்கக் கூடாது. விளக்கு துலக்கிய உடனேயே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும்.

*அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

*தெற்கு திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் நல்ல பலன்கள் ஏற்படாது.

*குத்து விளக்கிற்கு சிவப்பு வண்ண மலர்களை சாற்றலாம். இதனால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

*தீபச்சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற்றிற்கு காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றி விட வேண்டும்.

*வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் தீப விளக்கிற்கு பாவாடை அணிவித்து பூமாலை சுற்றி பூஜித்தால் சகல நன்மைகளையும் பெறலாம்.

*காலை, மாலை விளக்கேற்றும் போது, கற்கண்டை நிவேதனமாகப் படைத்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் செல்வ வளம் பெருகும்.

*தீபச்சுடரை கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைக்கக்கூடாது.

*மகாலட்சுமியின் அருளைப் பெற தீபம் ஏற்றுவோம். சகல நன்மைகளையும் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழ்வோம்.

-  எஸ்.ஜெயப்பிரியா, மதுரை.

Tags : Thirukarthikai ,
× RELATED திருக்கார்த்திகையையொட்டி...