- பிரியாலய
- மீனாட்சி ஆனந்த்
- ராம் பிலிம் ஃபேக்டரி
- சிவராஜ்
- கலையரசன்
- பிரேம்குமார்
- பெசன்ட் ரவி
- வித்யா போர்கியா
- ஷிவன்யா
- பிரியங்கா
- கவுரி
- பாலாஜி
- தியாகராஜன்
- தயாளன்
- பிரவீன்…
ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரிக்க, சிவராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘டிரெண்டிங்’. இதில் கலையரசன், பிரியா லயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் நடித்துள்ளனர். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையில் குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர்.
வரும் ஜூலை 18ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சிவராஜ் கூறுகையில்,
‘சமூக வலைத்தளங்களில் இளம் தம்பதிகள் பதிவிடும் சில ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. கலையரசன், பிரியா லயா உள்பட பலர், கதையை கேட்டவுடன் சம்பளம் பற்றி பேசாமல் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றினர். படம் முடிந்து தியேட்டரை விட்டு செல்லும் மக்கள் மனதில் கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் இவ்வளவு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறதா என்று எச்சரிக்கை உணர்வுடன் விவாதிப்பார்கள்.
ஆன்லைனில் மூழ்கிய தம்பதிகள் பற்றிய கதை கொண்ட இப்படத்தில், யூடியூபர் வேடங்களில் கலையரசன், பிரியா லயா நடித்துள்ளனர். ஆன்லைனில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அந்த கேம் இறுதியில் அவர்களை எந்த பிரச்னையில் சிக்க வைக்கிறது என்பது திரைக்கதை. சைக்கலாஜிக்கல் திரில்லரான இது, இன்றைய தலைமுறை கண்டிப்பாக பார்த்து திருந்த வேண்டிய படமாகும்’ என்றார்.
