×

தோட்டக்கலைத்துறையில் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நுண்ணீர் பாசன திட்டம்-சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்

மன்னார்குடி : தோட்டக்கலைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்க 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.பருவ நிலை மாற்றம் காரணமாக ஒரே நாளில் கன மழை பொழிவதும் அதனை தொடர்ந்து கடும் வறட்சி நிலவுவதை நாம் அறிவோம். தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பயிர்களுக்கு தேவையான தினசரி நிர்ணயிக்கப்பட்ட நீர், தேவையான அளவில் பயிருக்கு தருவது அதன் மகசூல் அதிகரிப்பிற்கு ஒரு இன்றியமையாத ஒன்றாகும்.பொதுவாக, திருவாரூர் மாவட்டம் அதிகமாக நஞ்சை நிலமும் தாழ்வான பகுதிகளை கொண்ட பகுதியாக உள்ளதால் நெற்பயிர் மிகச்சிறந்த பயிராக கருதப்படுகிறது. அதில் புஞ்சை வகைப்பாடு உடைய பகுதிகள் மேட்டு பகுதிகளாக உள்ளதால் தண்ணீர் கொண்டு செல்வது மிக சிரமம். அப்பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதில் குறிப்பாக காய்கறி, பழ, மரசெடிகள் மற்றும் மலர் பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும் அப்பகுதி மேட்டுநிலமாக உள்ளதால் தண்ணீர் ஏரி பாய்வதில் சிரமம் உள்ளது. அப்பகுதிகளில் நாம் எளிதாக நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைத்து காய்கறி பயிர்களை வளர்த்து பயன் பெறுகின்றனர்.குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், குடவாசல் போன்ற பகுதிகள் புஞ்சை நில வகைப்பாடு உள்ள நிலங்கள் கணிசமான அளவில் காணப்படுவதனால் காய்கறிகள் மற்றும் பழப் பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பகுதியாக உள்ளது.மேலும், நஞ்சை பகுதிக்கு ஏற்ற பழ பயிரான கொய்யா சாகுபடி மன்னார்குடி, கோட்டூர் வட்டாரங்களில் சில பகுதிகளில் சாகுபடி நுண்ணீர் பாசன வசதி மூலம் மேற்கொள்கின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 800 ஹெக்டேர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசனம் தோட்டக்கலை விவசாயிகள் மானியத்தில் அமைத்திட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட கிராமத்திற்கு 80 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறு குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன் பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம் என்றார்.இதுகுறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) இளவரசன் கூறுகையில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரம், ஆழ்துளை கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைத்திட ரூ.10 ஆயிரம், தரை நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. நுண் நீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் இந்த துணை நிலை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் இணைந்து கொள்ளலாம்.நுண்ணீர் பாசனம் அமைத்திட தேவையான ஆவணங்கள்: கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைபடம், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் மூன்று எண்கள், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சிறு குறு விவசாயி சான்று அட்டை, நீர்- மண் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.மேலும் தொடர்புக்கு, திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான் வட்டாரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர், திருச்செல்வம் 9655577082 என்ற எண்ணிலும், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய வட்டாரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் 9585874567 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றார்.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவசங்கர் கூறுகையில், புள்ளவராயன் குடிக்காடு கிரா மத்தில் எனக்கு சொந்தமான நிலத்தில் 1.55 ஹெக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக் கலை துறை மூலம்100 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுத்தனர். தற் பொழுது வருடத்திற்கு மூன்று முறை கத்திரி விவசாயம் செய்து வருகிறேன்.சொட்டுநீர் பாசனம் அமைக்கும் முன் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது, தற்போது மூன்று முறை வருடத்திற்கு கத்தரி அறுவடை செய்வது மிக்க மகிழ்ச்சியான தருணம். மேலும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதன் மூலம் நல்ல மகசூலும் கிடைக் கிறது. ஆதலால், திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துறைக்கு நன்றியினை தெரிவித்துக் கள்கிறேன் என்றார்.சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள்:தண்ணீர் பெருமளவில் சேமிக்கப்படுகிறது, தண்ணீர் பயிர்களின் வேர்களில் நேரடியாக பாய்ச்சப்படுவதினால் நீர் ஆவியாவது குறைகிறது. தேவையற்ற களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. பயிருக்கு தேவையான நிர்ணயிக்கப்பட்ட தினசரி தண்ணீர் கிடைக்கிறது. இதனால் மகசூல் அதிகரிப்பு நம்மால் உணர முடிகிறது….

The post தோட்டக்கலைத்துறையில் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நுண்ணீர் பாசன திட்டம்-சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் appeared first on Dinakaran.

Tags : Mannarkudi ,Horticulture Department ,
× RELATED பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி...