என்னைப் பார், என் அழகைப்பார்... சக ஹீரோயினுடன் தமன்னா கவர்ச்சி போட்டி

நடிகை தமன்னாவுக்கு நடன காட்சிகளில் வேகமாக, ரப்பர்போன்று வளைந்து ஆடும் நடன அசைவுகள் பிளஸ்ஸாக இருப்பதுபோல் அவரது நிறமும் பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பல படங்களில் அவர் கிளாமர் உடை அணிந்தாலும் நீச்சல் உடை அணிவதையும், லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிப்பதையும் தவிர்த்து விடுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமன்னாவிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற மாதம் அவர் அளித்த பேட்டியில்  செக்ஸ் பற்றி வெளிப்படையாக பதில் அளித்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

மேலும் நடிகர் சந்தீப் கிஷன் உடன் ஒரு படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது புதிய படத்தில் மெஹரீன் உடன் இணைந்து நடித்து வருகிறார். தமன்னாவை விட வயதில் குறைந்தவர் மெஹரீன். இந்த ரகசியத்தை தெரிந்துகொண்ட தமன்னா தன்னை மேலும் இளமையாக காட்டிக்கொள்வதில் முனைப்பு காட்டுகிறார். இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்காக நீச்சல் உடையில் இருவரும் நடிக்க வேண்டியிருந்தது.

அதற்கு தமன்னா மறுப்பு சொல்லாமல் ஓ.கே சொல்லிவிட்டார். இருவரும் நீச்சல் உடையில் என்னைப்பார் என் அழகைப்பார் என்று ரசிகர்களை பார்த்து கேட்கும் வகையில் ஸ்டைலாக நடந்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது. வயதில் இளையவரான மெஹரீன் தோற்றத்தைவிட தமன்னாவின் கிக்கான தோற்றத்துக்கு வரவேற்பு எகிறியிருக்கிறது. போட்டியாளரை சமாளிக்கும் டெக்னிக் தெரிந்து வைத்திருப்பதால் தான் தினம் தினம் புது ஹீரோயின்கள் அறிமுகமானாலும் தனது இடத்தை தமன்னாவால் தக்க வைத்திருக்க முடிகிறதாம்.

Tags : Tamanna ,match ,
× RELATED என் அழகை பற்றி கவலைப்படாதீங்க... ரசிகருக்கு ஓவியா டோஸ்