×

ஊட்டியில் குளுகுளு காலநிலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2வது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் வாரம் வரை கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், மழை குறைந்த நிலையில் கணிசமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதேபோல், படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திருந்தனர். அதிக சுற்றுலா பயணிகள் காரணமாக நீண்டநேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மேகமூட்டத்துடன் குளிரான காலநிலை நிலவியதால் குளுகுளு காலநிலையை அனுபவித்தபடியே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல், தொட்டபெட்டா மலைசிகரம், சூஉள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக காணப்பட்டது….

The post ஊட்டியில் குளுகுளு காலநிலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Oodi ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...