×

2வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-களை கட்டிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி : ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்நிலையில் காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிகிழமை முதலே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்ததது. இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக ஊட்டி நகரில் உள்ள ஒட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின. இதனிடையே இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கிய நிலையில், விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்திருந்தனர். அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தலங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் பல ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்திருந்த பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சிறப்பு மலர் காட்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தது மட்டுமின்றி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஊட்டி – கூடலூர் சாலையில் அமைந்துள்ள சூட்டிங்மட்டம், ைபக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளிகள் நிரம்பிய சூட்டிங்மட்டம் பகுதியை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் விரும்பினார்கள். கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். ஊட்டி – கூடலூர் சாலையில் ேபாக்குவரத்து நெரிசல்: ஊட்டியில் இரண்ாடவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். ஆம்னி பஸ்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள், கேரளாவில் இருந்து வருபவர்கள் ஊட்டி – கூடலூர் சாலை வழியாக ஊட்டி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி வரும் வழியில் ஊசிமலை, பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருைக புரிந்ததால் ஊட்டி – கூடலூர் சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்தன. இதனால் தலைக்குந்தா, பைன் பாரஸ்ட், காமராஜர் சாகர் அணை பகுதி, சூட்டிங்மட்டம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அவ்வப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்….

The post 2வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-களை கட்டிய சுற்றுலா தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...