×

தடயவியல் அதிகாரிகளை சந்திக்கிறார் அமலாபால்

விஷ்ணுவிஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்த அமலாபால் அடுத்தடுத்து கைநிறைய படங்கள் வைத்திருக்கிறார். புத்தாண்டு தினத்தில் பல நட்சத்திரங்கள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அமலாபால் ‘ஆடை’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாராம். புத்தாண்டு பிறந்ததும் அதே படப்பிடிப்பில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார். மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தில் அமலாபால் ஆடை எதுவும் இல்லாமல் வெறும் டிஷ்யூ பேப்பரை உடலில் சுற்றிக்கொண்டு புகைப்படத்துக்கு அளித்திருந்த போஸ் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோ அந்த பறவை போல, பெயரிடப்படாத இந்தி படம் ஆகியவற்றிலும் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் தடயவியல் பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர் பத்ரா கதாபாத்திரத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். கேரள முன்னாள் காவல் துறை  மருத்துவர் டாக்டர் பி.உமாதத்தான் கையாண்ட ஒரு உண்மை வழக்கை மையமாக கொண்டு இக்கதை உருவாகிறது. அபிலாஷ் பிள்ளை கதை எழுத அனூப் பணிக்கர் இயக்குகிறார். தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் கதாபாத்திரத்துக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அமலாபால் சில குறிப்புகளை பெறவும் திட்டமிட்டிருக்கிறார்.

Tags : Amala Paul ,
× RELATED நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த...