இந்தி படத்தில் லெஸ்பியனாக நடித்த ரெஜினா

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரெஜினா. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். ஆனால் இந்த தகவலை அவர் வெளியே கூறாமல் இருந்து வந்தார். இதற்கு காரணம், பாலிவுட் படத்தில் அவர் ஏற்றுள்ள வேடம்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. அனில் கபூர், அவரது மகள் சோனம் கபூர் நடிக்கும் படம் ‘ஏக் லட்கி கோ தேகா தோ அய்ஸா லகா’.

விரைவில் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரெஜினா லெஸ்பியன் வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. சோனம் கபூரும் ரெஜினாவும் படத்தில் லெஸ்பியனாக நடித்துள்ளனர். படத்தில் பெரிய வேடம் இல்லை என்பதாலும் லெஸ்பியன் கேரக்டர் என்பதாலும் இந்தியில் நடிப்பதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் ரெஜினா.

Related Stories: