×

மருத்துவ அறிக்கைகளை பதிவேற்ற மென்பொருள் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை:  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முகமது காதர் மீரான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை பதிவேற்றும் செய்யும் மென்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டும். பஞ்சாப், டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் மெட்லீபிஆர்  என்ற மென்பொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளன. மருத்துவ சான்றிதழ், உடற்கூறாய்வு சான்றிதழ் போன்ற சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யலாம். போலியான சான்றிதழ்களை உருவாக்க முடியாது. பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசுத் துறை அதிகாரிகளுக்கும் பலனளிக்கும். தமிழகத்திலும் இந்த மென்பொருளை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்….

The post மருத்துவ அறிக்கைகளை பதிவேற்ற மென்பொருள் கோரி ஐகோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mohammad Kadar Meeran ,Trichy district ,Dinakaran ,
× RELATED துறையூர் பகுதியில் தொடர் மழை...